இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!
ரீபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியான நிலையில் இணையம் முழுவலும் சலார் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
குறிப்பாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்திவிராஜ் சுகுமாறன் அவர்கள் சலார் திரைப்படத்தில் வரதராஜ் மன்னார் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப், கேஜிஎப்2 படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சலார் படத்தை தயாரிக்கின்றது. சலார் திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றது. சலார் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் சலார் படத்தின் டீசர் இன்று அதிகாலை 5.12 மணிக்கு வெளியாகியுள்ளது.
தற்பொழுது இணையம் முழுவதும் சலார் திரைப்படத்தின் டீசர் டிரெண்டிங்கில் உள்ளது. வெளியான சலார் திரைப்படத்தின் டீசரை பார்க்கும் பொழுது இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்த கேஜிஎப் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்பது தெரிகின்றது.
மேலும் கேஜிஎப் திரைப்படத்தில் நடித்த நடிகர் யாஷ் அவர்கள் சலார் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் தகவல் வந்தது. அதுவும் கேஜிஎப் திரைப்படத்தில் வந்த ராக்கி பாய் கதாப்பாத்திரத்தில் சலார் திரைப்படத்திலும் நடிகர் யாஷ் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது.
இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசரை பார்க்கும் பொழுது இயக்குநர் பிரசாந்த் நீல் சலார் திரைப்படத்தை கேஜிஎப் திரைப்படத்தோடு சேர்த்து எடுத்து பிரசாந்த் நீல் யுனிவர்ஸ் என்பதை உருவாக்கியிருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எதுவாக இருந்தாலும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி நமக்கு தெரிந்து விடும்.