வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

Photo of author

By Hasini

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

Hasini

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம் நாராயணவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் புவனேஸ்வரி. 18 வயதான இவர் 14 மாதங்களுக்கு முன் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, காஞ்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்ற 24 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவர் வீட்டில் வரதட்சணை கொண்டு வரும்படி, புவனேஸ்வரியை சித்ரவதை செய்துள்ளனர்.

கணவர் வீட்டில் நடந்த சித்திரவதையின் காரணமாக அவர் மனமுடைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. புவனேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புவனேஸ்வரியின் தாய் காஞ்சனா பொதட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் புவனேஸ்வரி வரதட்சனை கொடுமையால்தான் தற்கொலை செய்து கொண்டதாக அவர் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரியில் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அவர் வரதட்சணை கொடுமையால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்ததை அடுத்து புவனேஸ்வரியின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரை கைது செய்து உள்ளனர். மேலும் திருமணமாகி 14 மாதங்களே ஆவதால் திருத்தணி ஆர்.டி.ஓ சத்யா விசாரித்து வருகிறார்.

பெண்களுக்கு எல்லா பக்கமும் பிரச்சனைதான் போல. திருமணம் ஆனாலும் இருக்கும். திருமணம் ஆகாவிட்டாலும் சரி அவர்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். ஆனால் பாதிக்கப் படுவது என்னவோ பெண்கள் தான்.