அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்!

Photo of author

By Hasini

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சென்னை பாரிமுனை அருகே  வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த அஸ்கர் அலி என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி எனவும் மருத்துவக் காரணங்களுக்காக வெளியே செல்வதாகவும் பொய் கூறியுள்ளார் மேலும் அவர் போலி இ-பதிவு பெற்றுவிட்டு சவாரி ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் அதன்பின் தகாத வார்த்தைகளால் பேசி காவல் உதவி ஆய்வாளரை திட்டியுள்ளார்.

அதற்கு அந்த காவல் உதவி ஆய்வாளர் நான் என்னுடைய பணியை செய்துக் கொண்டிருக்கிறேன் என கூறியதை அடுத்து அந்த நபர் ஒரு பொண்ணு நீயே இப்படியெல்லாம் பேசுறியா? என்னடா இது மோசமான பொண்ணா இருக்குது? உனக்கெல்லாம் சத்தியமா நல்ல சாவே வராது சாபம் விடுகிறேன் அவ என்ன பண்ணிடுவா என இழிவாக பேசினார்.

மேலும் நான் இந்த இடத்தில் 40 வருடங்களாக வசித்து வருகிறேன் என்றும், திமுக அமைச்சர் சேகர்பாபு உடன் பேசுறியா எனவும் கூறி காவல்துறையை தொடர்ந்து ஒருமையில் திட்டினார். இதையடுத்து அந்த காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா அஸ்கர் அலி மீது புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக அதை தொடர்ந்து பெண் உதவி ஆய்வாளர் இடம் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.