திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிற்கு 20வது பிறந்தநாள்! உற்சாகமாக கொண்டாடிய யானை அகிலா!

0
147

பஞ்சபூத சிவ ஸ்தானங்களில் நீர் தலமாக திகழ்ந்து வருவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில். வரலாற்று புராதன சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி ஒரு தனியார் அறக்கட்டளை மூலமாக திருவானைக்காவல் கோவிலுக்கு அகிலா என பெயரிடப்பட்ட யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த யானை கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்தது என்று சொல்லப்படுகிறது.

அதோடு இந்த கோவில் யானை வழிபட்டு முக்தியடைந்த கோவிலாக விளங்குவதால் இங்கே யானைக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சிவபூஜைக்காக திருமஞ்சனம் எடுத்து வருகிறது என்கிறார்கள்.

அதோடு பகலில் நடைபெறும் உச்சிகால பூஜையின் போது அம்பாள் வேடம் தரித்த குருக்களுடன் சென்று இறைவனை அதோடு சுவாமி புறப்பாடு போன்ற பல்வேறு உற்சவங்களில் இறை பணியாற்றி வருகிறது என்கிறார்கள்.

மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக கருதப்படும் காட்டில் வாழும் யானைகள் அனைத்தும் நாட்டில் மனிதர்களுடன் வாழ முடியாது. இதில் ஒருசில யானைகள் மட்டுமே மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அப்படி வாழும் யானைகளில் சில கோவில்களில் தெய்வ தொண்டாற்றி வருவது பெரும் பாக்கியம் பெற்றதாக கருதப்படுகிறது.

அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருக்கும் யானையும், இந்த அகிலா யானையும், நண்பர்கள் என சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் திருவானைக்காவல் ஆலயத்தில் சிவனை பூஜை செய்து முக்தி பெற்றதாக கருதப்படும் யானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

நேற்று 19 வயது முடிவடைந்து யானை அகிலா தன்னுடைய 20 வது வயதை உற்சாகமாக கொண்டாடினாள் என சொல்லப்படுகிறது.

இதனை முன்னிட்டு யானை அகிலாவிற்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு பழங்கள், இனிப்புகள், வழங்கப்பட்டன. தனக்கு முன்பாக படையல் வைக்கப்பட்ட தர்பூசணி போன்ற பழ வகைகளை அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் தலையை ஆட்டியவாறு அகிலா உற்சாகமாக உட்க்கொண்டாள்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று கொண்டார்கள்.

யானை அகிலாவிற்கு முன்னரே ஷவர் குளியல் வசதி ஆலயத்தில் செய்து தரப்பட்டுள்ளது. கோவிலில் உள்ளேயே கார்த்திகை கோபுரத்தின் அருகே உள்ள நாச்சியார் தோட்டத்தில் சுமார் 3.5 லட்சம் மதிப்பீட்டில் 20 அடி நீளம் 20 அடி அகலத்தில் ஆறடி உயரத்திற்கு நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

கோவில் புனரமைப்பு பணிகளின் போது மீதமிருந்த கற்களை வைத்தும், கோவில் பணியாளர்களின் உடலுழைப்பில் பக்தர்கள் நன்கொடையாளர்கள் பெயரில் வழங்கப்பட்ட சிமெண்ட், மணல், போன்ற கட்டுமானப் பொருட்களை கொண்டும், இது கட்டப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

நீச்சல் குளத்திற்கு யானை அகிலா எளிதாக வந்து செல்லும் விதத்தில் சாய் தளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. பணிகள் நிறைவு பெற்று தற்சமயம் நீச்சல்குளம் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்ற நிலையில், குளத்தில் கோவில் யானை அகிலா உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ச்சியடைகிறது.

அதோடு அதற்கு தனியாக நடை பயிற்சியுடன் கூடிய தரை தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் பசுந்தீவனங்கள் பயிரிடப்பட்டு யானை மற்றும் மற்ற கால்நடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளியல் போடும் யானை அகிலாவை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கிறார்கள். ஏற்கனவே குளியலில் மிகவும் குஷியாக காணப்பட்ட யானை அகிலா தற்சமயம் இன்னமும் கூடுதல் புத்துணர்வுடன் இருக்கிறது என்கிறார்கள் பாகன்கள்.

Previous articleதேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பரபரப்பான அரசியல் கட்சிகள்!
Next articleபெங்களூரு விடம் விழுந்தது லக்னோ! 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!