தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் இருக்கின்ற குறிஞ்சி கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவகிரகங்கள், உள்ளிட்ட தெய்வங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்திருக்கிறார்கள்.காசியை விட வீசம் அதிகம் என்று தெரிவிக்கப்படும் இந்த தலத்தின் பெருமையை அறிந்த பக்தர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து தளத்தில் வழிபாடுகள் செய்வதிலிருந்து இந்த தலத்தின் பெருமை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த திருத்தலத்தில் தற்சமயம் ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்று இருக்கிறது. என இந்த பகுதியில் இருக்கின்ற பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோவில் முழுமையாக சேதம் அடைந்து காணப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இந்த கோவில் நிர்வகிக்கப்பட்டு இருந்தாலும் கோவில் முழுமையாக சேதம் அடைந்திருப்பதால் எந்தவிதமான பராமரிப்பு பணியும் செய்யாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
ஆகவே இனிமேலும் எந்தவிதமான தாமதமும் செய்யாமல் இந்த கோவிலுக்கான திருப்பணி வேலைகளை முன்னெடுத்து தமிழக அரசு குறிஞ்சி காசிவிஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசையும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளையும், தொகுதி சட்டசபை உறுப்பினர் அசோக்குமாரயும் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் எதிர்பார்ப்பை காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.