தென்காசி:
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் அனைத்து இந்து சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மயான பூமியில் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்றக்கோரி அனைத்து இந்து சமுதாய நல சங்கத்தின் சார்பில் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி செயல் அலுவலர் கே. முரளி அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த செயல் அலுவலர் கே.முரளி அவர்கள் மயான பூமியை நேரில் ஆய்வு செய்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது அனைத்து இந்து சமுதாய நலச் சங்கத் தலைவர் நடராஜ முதலியார் திமுக பேரூர் கழக பொருளாளர் அருணாச்சலம், ராகவன் சேனையர் மற்றும் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.