ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்து… 36 பேர் பலியானதாக தகவல்…
அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா நாட்டில் ஹவாய் தீவு கூட்டங்கள் உள்ளது. இந்த ஹவாய் தீவு கூட்டங்களில் மவுயி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா நகரமாக இந்த மவுயி தீவு இருந்து வருகின்றது.
அங்கு லஹைனா என்ற பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. ஆந்த காட்டுத் தீ காரணமாக லஹைனா பகுதியில் வசிக்கும் 12000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் வெளியேறிய அந்த நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சிலர் கடலில் குதித்தனர். பரவி வந்த காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு இந்த காட்டுத் தீயில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான வீடுகள் மற்றும் வணிகவளாகங்கள் தீக்கு இரையானது.
காட்டுத் தீ விபத்து காரணமாக மவுயி தீவில் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மவுயி தீவுக்கு சுற்றுலா வந்த 2000 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மவுயி தீவு மக்களையும் சுற்றுலா பயணிகளையும் பாதுகாக்க ஹவாய் மாநாட்டு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த காட்டுத் தீயை அணைக்க உதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளார்.