டெல்லி போராட்ட களத்தில் புகுந்த பயங்கரவாதிகள்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
100

டெல்லியில் எழுச்சியுடன் நடந்து வரும் விவசாயிகள் உடைய போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக அவர்கள் வன்முறையை நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் போராட்டக்களத்தில் கலவரம் உருவாகலாம் எனவும் மத்திய அரசு எச்சரித்து இருக்கின்றது இது நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்து இருக்கின்றது.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது இது விவசாயிகளுக்கு எதிரான மசோதா என்று தெரிவித்து இந்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடத்தி டெல்லியை முற்றுகையிட்டு இருக்கிறார்கள். டெல்லிக்கு வெளியே சிம் கு எல்லையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவ்வாறு போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் டி.ஆ.ர்.எஸ் இடதுசாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் திமுக சமாஜ்வாதி தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, போன்ற பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையிலே விவசாய அமைப்பினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார். அந்த நேரத்தில் போக்குவரத்து இடையூறு மற்றும் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு அமித்ஷா விவசாயிகளிடம் வலியுறுத்தி இருக்கின்றார்.

அதோடு இந்தச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் வாங்கும் வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருகிறார்கள். இன்று வரை மத்திய அரசிற்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. அதோடு விவசாயிகளின் போராட்டத்தை தேசிய அளவில் துரிதப்படுத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்திருக்கின்றன. இன்றோடு 17வது நாளை இந்தப் போராட்டமானது நிறைவு செய்திருக்கிறது.

வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு தயார் என்று அறிவித்து இருக்கின்றது ஆனாலும் இந்த சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறாத வரை போராட்டம் முற்றுப் பெறாது என்று விவசாயிகள் உறுதியாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்காவிட்டால் அடுத்தகட்டமாக ரயில் மறியல் போராட்டத்தை நடத்த இருக்கின்றோம், என்று விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் போராட்டம் திசை திரும்பும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது அதே சமயத்தில் விவசாயிகள் உடைய போராட்டத்திற்கு சமூக விரோதிகள் புகுந்து இருப்பதாகவும் மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கின்றது. இவ்வளவு பெரிய எழுச்சியுடன் நடந்த வரும் இந்த விவசாயிகளின் போராட்டத்தை சமூக விரோதிகள் திசைதிருப்ப வாய்ப்பிருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவுஅமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இருக்கின்றார். போராட்டம் நடக்கும் இடத்தில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது எனவும், அவர் கேட்டறிந்து இருக்கின்றார் அந்த சமயத்தில் விவசாயிகள் மத்தியிலே அரசியல்வாதிகள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்களா என்பது தொடர்பாகவும் கேட்டதாக தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து டெல்லியை ஒன்றிணைக்கும் பஞ்சாப் ஹரியானா உத்திரப்பிரதேசம் போன்ற எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பாதுகாப்பை பலப்படுத்தவும் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.

போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென்று விவசாயிகள் தரப்பில் பேசிய ஒருசிலர் சார்ஜில் இமாமை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றார்கள். இது மத்திய அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இதுதொடர்பாக தெரிவித்திருக்கின்ற விவசாயிகள் தங்களுடைய போராட்ட களத்தில் எந்த சமூக விரோத சக்திகளோ பயங்கரவாதிகளோ ஊடுருவவில்லை என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Previous articleநீங்கள் நினைப்பது மட்டும் நடக்கவே நடக்காது! கராத்தே தியாகராஜன் அதிரடி கருத்து!
Next articleஉலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறக்கட்டளைக்கு சிஇஓ ஆக நியமிக்கப்பட்டவர் – யார் தெரியுமா?