பிரபல நாட்டு வழிபாட்டு தளத்தில் பயங்கர துப்பாக்கி சூடு! 18 பேர் பலி!
மேற்கு ஆப்பிரிக்க நாகளில் ஒன்றுதான் நைஜீரியா. இந்த நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நேரங்களில் மனித வெடிகுண்டுகளாகவும், சில நேரங்களில் பல இடர்பாடுகளையும் மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதில் பலர் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கருத்திலும், கவனத்திலும் கொள்வதில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நிறைவேற்றிவிட்டு போய்க் கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் அந்நாட்டின் நைஜர் மாகாணத்திலுள்ள மஷீகு நகரின் மசகுஹா கிராமத்தில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு தளமான மசூதி ஒன்று உள்ளது.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தொலுகையில் ஈடுபடுவார்கள். அதேபோல் நேற்று காலை நேரத்தில் பலர் அங்கு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் எதிர்பாராமல் ஒரு நபர் புகுந்து, அதுவும் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அதில் பரிதாபமாக மசூதியில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர்.