அருணாச்சலத்தில் 6 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவம்!!சீன ஆயுதங்கள் கைப்பற்று?

Photo of author

By Pavithra

      
அருணாச்சல பிரதேச காவல்துறை, ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றின் கூட்டுக் குழுவிற்கு,அருணாச்சல பிரதேசத்தின் லாங்கிங் மாவட்டத்தில் உள்ள என்ஜினு கிராமத்தில் 6 முதல் 8 பேர் ஆயுதம் ஏந்திய என்.எஸ்.சி.என்-ஐ.எம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அடர்த்தியான காடு மற்றும் மலைப் பகுதியில் அவர்களைத் தேடும் பணியில் கூட்டுக்குழு ஈடுபட்டது.

இவர்களை கண்ட தீவிரவாதிகள் ஒரு தற்காலிக முகாமில் தஞ்சம் புகுந்து காவல்துறை, ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவம் மற்றும் காவல்படையினரும் தீவரவாதிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அந்த துப்பாக்கிச் சண்டையில் 6 என்.எஸ்.சி.என்-ஐ.எம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் .

இதில் அசாம் ரைபிள்ஸ் வீரர்களும் காயமடைந்தனர்.6 நீண்ட தூர ஆயுதங்கள் (4 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 2 சீன எம்.க்யூ 81 துப்பாக்கிகள்), 2 கையெறி குண்டுகள், 1 ஐ.இ.டி, மற்றும் வெடிமருந்துகள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. என்று இது தொடர்பாக பேசிய அருணாச்சல பிரதேச டிஜிபி, ஆர்.பி. உபாத்யாய், கூறினார்.