தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம்?

Photo of author

By Pavithra

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம்?

Pavithra

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம்

இந்திய -மியான்மர் எல்லைப்பகுதியான மணிப்பூர் மாநிலத்தில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்ணிவெடியின் தாக்கத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.நேற்று மாலை வீரர்கள் வழக்கமாக ரோந்துபணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியபோது அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என செல்லபடுகிறது. இந்த தாக்குதலின் போது 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும்,மேலும் ஆறுக்கும் மேற்பட்ட ரைபிள் படைவீரர்கள் கடுமையான காயங்களுடன் உயர் தப்பியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.