பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்!

0
156
Terror in Pakistan! Burn and kill a man alive! This is the reason!
Terror in Pakistan! Burn and kill a man alive! This is the reason!

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் அவரை திடீரென்று நூறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அவர்கள் தாக்கியதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்துவிட்டார்.

ஆனாலும் அந்த நபர்கள் ஆத்திரம் அடங்காமல் அவரை நடு ரோட்டிலேயே எரித்து விட்டனர். மேலும் இது குறித்து நமக்கு தெரிவிக்கையில் ஒரு அரசியலமைப்பின் சுவரொட்டி ஒன்று அவரது தொழிற்சாலையின் அருகே ஒட்டப்பட்டிருந்தது. தெஹ்ரீக் – இ – லப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் அமைப்பின் நோட்டீஸ் தான் அவர் கிழித்து எறிந்தார் என்று சொல்லப்படுகிறது. அதை பார்த்த அவர், அதைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதை அவர் குப்பைதொட்டியில் போடும் போது அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த இரண்டு நபர்கள் அதை கவனித்து, வெளியில் யாரிடமோ சொன்னதாக தெரிகிறது. அதன் காரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்த 100 பேர் ஒன்று திரட்டி அந்த தொழிற்சாலைக்குள் வந்தனர். உள்ளே வந்த அந்த நபர்கள் மேலாளரை தரதரவென்று நடுரோட்டிற்கு இழுத்து வந்து பயங்கரமாக தாக்கி உள்ளனர்.

அவரை சரமாரியாக அடிக்கும் போதே அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ஆனால் அந்த கொலை வெறி கும்பலுக்கு அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அவரை அங்கேயே பலரது முன்னிலையில் எரித்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பயங்கர அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவர் ஒரு இலங்கையைச் சேர்ந்த நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சித்ரவதை செய்ய காரணம் என்ன என்பது போல பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பதற்றமான சூழல் உருவானதை அடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூட்டத்தினரை அடித்து விரட்டி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யவில்லை என்பது வேதனை அளிக்கும் விஷயம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் மாகாண முதல் மந்திரி உஸ்மான் புஸ்தார், இந்த கொடூர செயலில் தொடர்புடைய ஒவ்வொருவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் பிரதமர் தெரிவிக்கையில், இந்த பயங்கரமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், இது குறித்த விசாரணையை விரைவில் தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானமான நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous articleமும்பையில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?
Next articleகொஞ்சம் கூட மாறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!