கஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்! பலியான மாவட்ட பாஜக தலைவர்!

0
187
Terrorist attack in Kashmir! BJP leader killed
Terrorist attack in Kashmir! BJP leader killed

கஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்! பலியான மாவட்ட பாஜக தலைவர்!

ஜம்மு காஷ்மீரில், யூனியன் பிரதேசத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள லால் சவுக் பகுதியில் நேற்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது மாவட்ட பாஜக மூத்த தலைவர் குல்காம் மாவட்ட பாஜக கிஷான் மோச்சா தலைவர் ரசூல் டார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பனோ ஆகிய இருவரும் அதில் படுகாயம்  அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் நேற்று உயிரிழந்துவிட்டனர். பாஜக தலைவர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாடு முழுவதிலும் இந்த பயங்கரவாதிகள் பல்வேறு விதங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாஜக தலைவர் மற்றும் அவரது மனைவி இருவரும் சுடப்பட்டது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளவும் ஆணைகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Previous articleஎங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ!
Next articleமோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு!