ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் தீவிரவாத அமைப்பான தாலிபான்கள் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.
அந்த நாட்டிற்கு உதவியாக இருந்த அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்த நாட்டில் தாலிபான்கள் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் தலைமறைவானார் அவர் ஏமனில் இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் வாசம் ஆட்சியதிகாரம் சென்றதை தொடர்ந்து அந்த நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலிருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் குர்ரம் மாவட்டத்திலிருந்த பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டார்கள். இதனை ராணுவ விவகாரப் பிரிவு கூறியிருக்கிறது.
அதேபோல பாகிஸ்தானிய வீரர்களும் பயங்கரவாதிகளை நோக்கி பதிலடி கொடுத்திருக்கிறார்கள், இதில் அவர்களுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.