சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்!! ரஷ்யா தலையிட்டால் பிராந்திய போராகும் பதற்றம்!!

Photo of author

By Sakthi

சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்!! ரஷ்யா தலையிட்டால் பிராந்திய போராகும் பதற்றம்!!

Sakthi

Terrorist organization in war against Syria, Tensions could turn into a regional war if Russia intervenes

Syria Civil War: சிரியா எதிராக போரில்  பயங்கர வாத அமைப்பு,
ரஷ்யா தலையிட்டால் பிராந்திய போராக மாறும் பதற்றம்.

சிரியாவில் உள்நாட்டு போர் தொடர்ந்து போர் நடப்பது என்பது தொடர் கதையாக இருக்கும் ஒன்று ஆகும். சீரியா அரசுக்கும் உள்நாட்டு மகளுக்கும் போர் நடந்து வருகிறது.கடந்த 2014 ஆண்டு ஐ.நா சபையின் ஆய்வின் படி 1,91,369 பேரினால் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

இதனால் மக்கள் மீது அதிக அளவில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் காரணமாக அகதிகளாக பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு சிரியாவின் டமாஸ்கஸ் தலைநகர் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து. அவர்கள் மீது ரஷ்யா ராணுவ உதவியுடன் சிரியா அரசாங்கம் வான்வழி தாக்குதல் நடத்தியது இதில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.

இந்த போரில் மீண்டும் சிரியா அதிபர் அஃபேஸ் அல்-அஸாத்தின் முப்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருக்கு பின் அவரது மகன்  பஷர் அல்-அஸாத் கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.கடந்த 2018 ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போர் ரஷ்யா உதவியுடன் முடிவுக்கு வந்தது.

தற்போது மீண்டும் அல் குவைதா உடன் சேர்ந்து செயல்பட்டு வந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போர் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். ரஷ்யா அதிபர் புதின் மீண்டும் சிரியா பிரதமர் பஷர் அல்-அஸாத் உதவிகரம் நீட்டுவார என  எதிர்பார்க்கப் படுகிறது.

இவ்வாறு சிரியா அதிபர் ரஷ்யாவிடம் மீண்டும் உதவி கேட்டால் அது உள்நாட்டு போராக இருக்காது. இது மிகப் பெரிய அளவில் போராக மாற வாய்ப்பு தகவல் வெளியாகி வருகிறது.