national:ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில்
பெண் உட்பட 12 பொது மக்கள் காயமடைந்தார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபடுவது என்பது பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்சனை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஜம்மு-காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கிறது. காஷ்மீர் தனி நாடு கோரிக்கை கொன்ட தீவிரவாத அமைப்பு தற்போது வரை அப்பகுதியில் உள்ளது. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவல், மேலும் சீனா கிழக்கு ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.
இது போன்ற அசாதாரண சூழல் ஜம்மு-காஷ்மீரில் எப்போதும் இருக்கும். ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதிகளால் இந்தி ராணுவத்தினர் மீது எண்ணற்ற தாக்குதல்கள் முந்தைய ஆண்டுகள் நடைபெற்றது. எனவே மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளார்கள். நேற்று சம்பவத்தன்று ஸ்ரீ நகர் வாரச்சந்தையில் ,பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அவர்களை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடி உள்ளார்கள் .
இந்த தாக்குதலில் பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தார்கள். மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கள். தாக்குதலை நடத்தியவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது.இச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் உமர் அப்துல்லா , மேலும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் ஜம்மு-காஷ்மீர் ஐ ஜி குமார் பிர்தி பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.