தாலியை காக்கும் காரடையான் நோன்பு!

Photo of author

By Sakthi

பெண்கள் பெரும்பாலும் மேற்கொள்ளும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக கருதப்படுவது காரடையான் நோன்பு மாசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு வரும் சிறப்புமிக்க இந்த விரதம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது.

தங்களுடைய மாங்கல்ய பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விரதத்தை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் என்றும், சொல்கிறார்கள்.

அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி இவள் ஒருமுறை காட்டிற்கு சென்றபோது அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்து காதல் செய்யத் தொடங்கினாள் நாட்டிற்கு திரும்பிய உடன் தன்னுடைய காதல் தொடர்பாக தந்தையிடம் தெரிவித்தாள்.

இதனைத் தொடர்ந்து அசுவபதி மன்னன் அந்த இளைஞர் தொடர்பாக விசாரிக்க நினைத்தார். அப்போது நாரதர் மூலமாக அவன் ஒரு அரசகுமாரன் என்பதும், குறைந்த ஆயுளை கொண்டவன் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

சத்தியவானின் ஆயுள் ரகசியத்தை தெரிந்து கொண்ட மன்னன் தன்னுடைய மகளுக்கு அவனை திருமணம் செய்து வைக்க தயக்கம் காட்டினார். ஆனாலும் சாவித்திரி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தந்தையிடம் உறுதியாக நின்றுவிட்டாள்.

மன்னனின் மகள் பிடிவாதத்தை தொடர்ந்து மனம் சற்றே பதறினாலும் வேறு வழியில்லாமல் சாத்தியவானுக்கே சாவித்திரியை மணமுடித்துக் கொடுத்தார் மன்னர். திருமணத்திற்குப் பின்னர் காட்டில் சாத்தியவானுடன் வாழ்ந்து வந்தால் சாவித்திரி சரியாக ஒருவருடம் முடிவடைந்த நிலையில், சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவான் உயிர் பிரிந்தது. அன்றைய தினம் காரடையான் நோன்பு என்று சொல்லப்படுகிறது.

எவருடைய கண்ணுக்கும் தென்படாத விதத்தில் அரூபமாக வந்த எமதர்மன் சத்தியவானின் உயிரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட தொடங்கினார். ஆனால் காரடையான் நோன்பை முறைப்படி செய்து வந்த சாவித்திரி கண்களிலிருந்து எமதர்மன் தப்ப முடியவில்லையாம்.

இது எமதர்மனுக்கு தெரிந்தாலும் கூட அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து விலக முற்பட்டார் எமதர்மன்.

எமதர்மனை கண்டுகொண்ட சாவித்திரி எமதர்மன் செல்ல, செல்ல, அவரை பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி இவள் எதற்காக நம் பின்னால்? வருகிறாள் என்று நினைத்த எமதர்மன் அதனை அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என முடிவு செய்தார். ஆகவே சாவித்திரியை நோக்கி பெண்ணே உனக்கு என்ன வேண்டும் எதற்காக என்னை பின் தொடர்ந்து வருகிறாய் என்று கேள்வி எழுப்பினார்.

சாவித்திரி அவருடைய கேள்விக்கு எந்த விதமான பதிலையும் தெரிவிக்கவில்லை எமதர்மனே தொடர்ந்து உரையாடினார் அதாவது, உன்னுடைய கணவனுக்காக தான் நீ என்னை பின்தொடர்கிறாய் என்றால் அதில் உனக்கு என்னால் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

அவனது உயிர் திரும்புவது முடியாத காரியம் வேறு ஏதாவது வரம் ஒன்றை என்னிடமிருந்து உனக்கு வேண்டுமானால் கேள் நிச்சயமாக தருகிறேன் என்று தெரிவித்தார்.

எமதர்மனின் இந்த வாக்கை சாதுரியமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு வார்த்தை கேட்டால் சாவித்திரி அதாவது எனக்கு பிறக்கின்ற 100 குழந்தைகளை தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு என் மாமனார் கொஞ்ச வேண்டும் என்று ஒரு வரத்தைக் கேட்டாள்

சாவித்திரி அவ்வாறு கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் எமதர்மன் அப்படியே ஆகட்டும் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் .ஆனாலும் அவரைப் பின்தொடர்ந்து சாவித்திரி மறுபடியும் நிறுத்தினாள்.

எதற்காக என்னை தடுக்கிறாய் என்பதைப்போல பார்த்த எமதர்மனிடம் சரி நீங்கள் கொடுத்த வரத்தின் அடிப்படையில் என்னுடைய கணவரின் உயிரை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டாள்.

அப்போதுதான் எமதர்மனுக்கு தான் எப்படிப்பட்ட ஒரு வரத்தை கொடுத்திருக்கிறோம் என்பது தெரியவந்திருக்கிறது. கொடுத்த வரத்தை மீற இயலாது என்பதால் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் எமதர்மன்.

சத்தியவானின் உயிரை சாவித்திரி மறுபடியும் பெறுவதற்காக அவளுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது அவள் முறைப்படி கடைப்பிடித்து வந்த காரடையான் நோன்பு தான் என்று சொல்லப்படுகிறது.

இதன்காரணமாக, இந்த விரதம் சாவித்திரி விரதம் என்றும் பெயர் பெற்றதாகும். இது காமாட்சி அம்மன் கடைப்பிடித்த விரதம் என்பதால் அது காமாட்சி விரதம் என்றும் சொல்லப்படுகிறது.