தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்!!

0
290
#image_title
தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மட்டும் தான் உண்மையான தலைவன் என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு காரணம் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபார வெற்றிதான்.
நேற்று அதாவது மே 20ம் தேதா டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இதையடுத்து 224 ரன்களை இலக்ககாக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி பெற்றது.
77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் கூறி மகேந்திரசிங் தோனியை பற்றி புகழ்ந்து தமிழில் டுவீட் செய்துள்ளார்.
ஹர்பஜன் சிங் அவர்கள் அவருடயை டுவிட்டர் பக்கத்தில் “வழியில் கண்ட மிருகங்களை தந்திரமாக இழுத்துச் செல்லும் ஓநாய் கூட்டத்திற்கு வேட்டையாடி வென்று, நிற்கும் சென்னை அணியின் வேட்கை தெரிவதில்லை. எல்லா தகுதியும் இருக்குறவன் தலைவன் இல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தத்தையும் ஐபிஎல் கப் அடிக்க தகுதியானவங்களா மாத்துன தல தோனா மட்டும்தான் தலைவன்” என்று பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.
Previous articleஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!
Next articleநாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!