கையில் துப்பாக்கியுடன் வந்தாச்சு தளபதி பட ஃபர்ஸ்ட் லுக்! படம் பெயர் என்ன தெரியுமா? சம்பவம் இருக்கு!!!

Photo of author

By Kowsalya

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதனால் ரசிகர்கள் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது தளபதி நடிக்கும் 65வது படம் என்பதால் தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளது. இதை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில்தான் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்தது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இப்பொழுது படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வரும் 21ஆம் தேதி தளபதி விஜய் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்திலேயே தளபதி 65 படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்தது

தளபதி 65 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இதனால் தளபதியின் ரசிகர்கள் சரியான விருந்துகாக காத்து இருந்தனர் என்றே சொல்லலாம்.

ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட “செஞ்சிட்டா போச்சு” என்ற விஜய்யின் குரலில் அனிருத் இசையில் அதிரடி ஆகவே உள்ளது என்று கூறலாம். மாஸ்க்கு பெயர் போனவர் தளபதி. இந்த பீஜியம் உடன் கூடிய இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெறித்தனமாகக் அதிர வைத்திருக்கிறது.

இந்நிலையில் 6 மணிக்கு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் அவர் நிற்கும் சாயலை பார்த்தாலே படத்தில் ஏதோ சம்பவம் இருக்கு என்பது போல் உள்ளது. படம் பெயர் என்ன தெரியுமா பீஸ்ட் ( Beast). நெல்சனின் இயக்கத்தில் அனைவரையும் மிரட்ட வருகிறார் தளபதி.