லீக் ஆன “பீஸ்ட்” திரைப்படத்தின் கதை! உண்மையா?

Photo of author

By Kowsalya

தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கதை கரு வெளியானதாக தகவல்கள் வந்துள்ளது.

பீஸ்ட் திரைப்படம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிரம்மாண்டமான மால் ஒன்றிற்கான செட் நிறுவப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, அந்த செட் உயர் மின்னழுத்தம், அட்ரினலின்-பம்பிங் ஆக்சன் காட்சிக்கு அந்த செட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் கதையின் கருவை அவர்களே உருவாக்கி கற்பனை செய்து வருகின்றனர்.

வெளிவந்த தகவல்களின்படி, ஷைன் டாம் சாக்கோ நடித்த வில்லன்களில் ஒருவராக இருக்கலாம். மலையாள படங்களில் மக்கள் மனதை வென்றவர் இப்பொழுது தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார், கடைக்காரர்களை மாலில் பிணைக்கைதிகளாக வைத்து, அதன் பிறகு தளபதி விஜய் அவர்களை மீட்க மற்றும் வில்லனின் மோசமான திட்டங்களை முறியடிக்க ‘பீஸ்ட்’ முறைக்கு வருவார்.

தளபதி விஜய் இதில் ஒரு சிறப்பு ஏஜென்ட் அதிகாரியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. சிறப்பு ஏஜன்ட் செயல்பாடு அவரது துணிச்சல், திறமை, தனித்துவமான முறைகள் மற்றும் தெளிவாக சிந்திக்கும் திறனை ஆகியவற்றை வெளிப்படுத்தி அவர் எப்படி பிணைக் கைதிகளை மீட்கிறார் என்பதே படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க கற்பனை யாகும் படம் வெளிவந்தால் தான் எப்படிப்பட்டது என்று தெரியும்.

தற்போதைய சென்னையிள் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்து விட்டு , நடிகர்களும் குழுவினரும் படத்தின் மிக முக்கியமான காட்சிகளை ரஷ்யாவில் எடுக்க போகிறார்கள் என்று சொல்லபடுகிறது. அவற்றில் பல சர்வதேச வில்லன்களும் உள்ளதாக தகவல்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட், தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர். இந்த தமிழ் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.