தளபதி68 படம் தான் கடைசி திரைப்படம்!! அதன் பிறகு நடிகர் விஜய் என்ன செய்ய போகிறார்???

0
164

தளபதி68 படம் தான் கடைசி திரைப்படம்!! அதன் பிறகு நடிகர் விஜய் என்ன செய்ய போகிறார்???

 

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி68 படம் கடைசி திரைப்படம் என்றும் அதன் பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றியும் தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லியோ திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய பொருட் செலவில் லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

 

லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் நடிகர் விஜய் அவர்களின் 68வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

 

தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் அதாவது லியோ திரைப்படம் வெளியான பிறகு தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. தளபதி68 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து சிறிய தகவல் கிடைத்துள்ளது.

 

தளபதி68 திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் விஜய் சினிமாவிற்கு குட்பை சொல்லப் போவது இல்லை. சினிமாவில் இருந்து ஒரு மிகப் பெரிய இடைவெளியை எடுக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த இடைவெளியில் நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கப் போவதாகவும் 2026ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான சில செயல்களை தீவிரமாக நடிகர் விஜய் செய்யப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஒரு நேர உணவு வழங்கிய நடிகர் விஜய் அவர்களின் செயல் அரசியல் தலைவர்களின் மத்தியிலும் அரசியல் பார்வையாளர்களின் மத்தியிலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

 

சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த 234 தொகுதிகளிலும் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் சான்றிதழையும் நடிகர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்வு நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வரப்போவதை மேலும் உறுதிபடுத்தியுள்ளது.

 

Previous articleகட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!
Next articleசாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்!! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!!