போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கடலூரில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

தமிழக அரசு அறிவித்து இருக்கின்ற 10 சதவீத தீபாவளி போனஸ் 20 சதவீதமாக அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கடலூர் பணிமனையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பண்டிகை காலம் முன் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்கவும் தொழிலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.