ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்! நிக்கோலஸ் பூரண் அதிரடியான ஆட்டம்!!

0
152
#image_title
ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்! நிக்கோலஸ் பூரண் அதிரடியான ஆட்டம்!
நேற்று ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா வீசிய ஒரு ஓவரால் வெற்றி பெறவிருந்த ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியுள்ளது. இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
நேற்று அதாவது மே 13ம் தேதி நடந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் லக்னோ அணியும் ஹைதராபாத் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹென்ரி கிளாசன் 47 ரன்களும் அப்துல் சமாத் 37 ரன்களும் சேர்த்தனர். அன்மோல்பிரீட் சிங் 36 ரன்கள் சேர்த்தார். லக்னோ அணியில் பந்துவீச்சில் க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
183 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் கேய்ல் மேயர் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளிக்க மற்றொரு தொடக்க வீரர் டிகாக் 29 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய பிரேராக் மன்கட் அவர்கள் 64 ரன்கள் சேர்த்தார்.
நேற்று ஆட்டத்தில் 15வது ஓவரை ஹைதராபாத் அணியின் அபிஷேக் ஷர்மா வீசினார். இந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் எடுத்தனர். அபிஷேக் ஷர்மா வீசிய இந்த ஓவரில் முதல் மற்றும் இரண்டாவது பந்தில் சிக்சர் அடித்த மார்கஷ் ஸ்டோயனஸ் அடுத்த பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவருக்கு அடுத்து களமிறங்கிய நிக்கோலஷ் பூரண் அந்த ஓவரில் மீதமுள்ள மூன்று பந்துகளையும் 6க்கு அடித்தார். ஐந்து சிக்சர்கள் ஒரு வைட் ரன் என மொத்தம் 31 ரன்கள் 15வது ஓவரில் இருந்து வந்தது. இதனால் 19.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து லக்னே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் மார்கஷ் ஸ்டோய்னிஸ் 40 ரன்களும் நிக்கோலஸ் பூரண் 13 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். 64 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரேராக் மன்கட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து 13 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி முன்னேறியுள்ளது.
Previous articleநேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா!!
Next articleஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்!!