நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு!!

Photo of author

By Sakthi

நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு!!

Sakthi

நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு!

நைஜீரியா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நைஜீரிய நாட்டின் 16வது அதிபராக போலா தினுபு அவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.

இதையடுத்து அதிபர் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் ஐந்தாயிரம் பேர் அமரக் கூடிய இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ருவாண்டா நாட்டு அதிபர் ககாமே, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரும் கலந்து கொண்டனர். அழைப்பிதழ்கள் இல்லாத நாட்டு மக்கள் அதிபர் பதவியேற்பு விழாவை தவர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதிபர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு நைஜீரியாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய நாட்டின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் மூன்று நாள் அரசுமுறை பயணமாக நைஜீரியா சென்றுள்ளார்.