தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது! 26வது மெகா தடுப்பூசி முகாம்!

Photo of author

By Sakthi

நோய்தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கிய புதிதில் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.இந்த நோய் தொட்டில் சிக்கி பல முக்கிய நபர்கள் பலியானார்கள் திரையைப் பிரபலங்கள் ,அரசியல்வாதிகள் மூத்த தலைவர்கள் என்று பலரும் இந்த நோய்த்தொற்றினால் பலியானார்கள்இதன்பிறகு தடுப்பூசிகள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் மிக வேகமாக செலுத்தப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசிகள் காரணமாக, நோய்த்தொற்று மெல்ல,மெல்ல குறையத் தொடங்கியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது 1 நாளைக்கு 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தநிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவு படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

இதனடிப்படையில், ஒவ்வொரு சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு 100% பெயருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்சமயம் மழையில் 25 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடைபெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 10,06,29,631 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன 18 முதல் 44 வயது வரையுள்ள பிரிவுகளில் 5,10,31,421 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன இன்னும் 2 தவணை தடுப்பூசி செலுத்தாமல் 1,25,00000 பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டாமலிருப்பது சுகாதாரத் துறையை கவலையடைய செய்திருக்கிறது.

சென்னையில் முதல் தவணை தடுப்பூசி 98 சதவீதம் பேரும், 2வது தவணை தடுப்பூசி 87 சதவீதம் பேரும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 2வது தவணை தடுப்பூசி செலுத்தும் தகுதி வாய்ந்தவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 26வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று ஆரம்பித்து நடைபெற்று வருகிறது ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 1600 மையங்களில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த மெகா சிறப்பு முகாம்களில் முன்பு 20 லட்சம் பேர் வரையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் இந்த எண்ணிக்கை படிப்படியாக 5.5 லட்சமாக குறைந்திருக்கிறது.. இன்று நடைபெறும் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தடுப்பூசி சேர்த்துக் கொண்டு நோய் தொற்றிலிருந்து இனிவரும் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள்விடுத்திருக்கிறது