3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா 

0
316
#image_title

3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா 

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று  2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தக்கவைத்தது. இதை எடுத்து 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் இரண்டு ஆடுகளங்களைப் போலவே ஹோல்கேர் ஸ்டேடியமும் சுழற் பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வீரர்களை திணறடித்த சுழற் பந்து சூறாவளிகள் ரவீந்திர ஜடேஜா (17 விக்கட்டுகள்) மற்றும் அஸ்வின் (14 விக்கெட்டுகள்) இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா வீரர்களை அச்சுறுத்த தயார் நிலையில் உள்ளனர்.

அதேபோல் ஆல் ரவுண்டரான அக்சர் பட்டேல் பேட்டிங்கில்(158 ரன்) கலக்கினார் தவிர பந்து வீச்சில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அவரும் இன்று சுழற் பந்தில் தனது திறமையை காட்டினால் ஆஸ்திரேலிய அணியின் பாடு திண்டாட்டம் தான்.

இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்த வரை ரோகித் சர்மா தவிர வேறு யாரும் சதம் அடிக்கவில்லை. முன்னாள் கேப்டன் வீராட் கோலி 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. இந்தப் போட்டியிலாவது அந்த ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்பாராத விதமாக பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக பந்து வீசிய வந்து வீச்சாளர்களான அக்சர் பட்டேல் (158 ரன்), ரவீந்திர ஜடேஜா (96 ரன்), அஸ்வின் (60ரன்) என ரன் எடுப்பதிலும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறுவது இந்தியாவிற்கு முக்கியமான ஒன்றாகும். இந்திய அணி இதில் வெற்றி பெற்றால் ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். அத்துடன் தொடரும் வசமாகி விடும்.மேலும் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’இடத்துக்கு முன்னேறி மூன்று வடிவிலான போட்டியிலும் ஒரே சமயத்தில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டிய முதல் அணி என்ற பெருமையை பெறும். 

இதில் தோல்வி பெற்றாலும் 4-வது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி உருவாகும். எனவே இந்த போட்டியிலேயே வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.