72 மணி நேர கெடு முடிந்தது! கோட்டையை நோக்கி பயணிக்க தயாராகும் பாஜக அலறும் திமுக!

Photo of author

By Sakthi

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை குறைத்து உத்தரவிட்டார்.

இதற்குப்பிறகு உரையாற்றிய அவர் மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரையில் 1 வருடத்திற்கு முன்பாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டாகிவிட்டது.

ஆகவே இனி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாநில அரசு 72 மணி நேரத்திற்கு குறைக்க வேண்டும். இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை விதித்த 72 மணிநேர கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாவது, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி வழங்கியது.

ஆனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் மட்டும் குறைத்துவிட்டு சலுகை வழங்கியது போல பேசிக் கொள்கிறது. டீசல் விலையில் ஒரு ரூபாய் கூட குறைக்காமல் பொது மக்களை ஏமாற்றி விட்டார்கள் என தெரிவித்தார்.

அதோடு மத்திய அரசின் கலால் வரியை விடவும் மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி தான் அதிகம். ஆனாலும் மாநில அரசு வரியை குறைக்க மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும் அடிப்படையிலான கலால் வரி எந்த மாறுதலும் செய்யவில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக மறைத்துவிட்டு நாங்கள் மட்டுமே யோக்கியர்கள் என்பதை போல காட்டிக்கொள்ளும் திமுக அரசு போலி வேடம் போடுகிறது. இதை பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

கெடு முடிவடைந்த பிறகும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காத பட்சத்தில் அறிவித்தபடியே கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும்.

முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் அதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை தமிழக பாஜக ஆரம்பித்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

ஜூன் முதல் வாரத்தில் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறோம். ஏற்கனவே திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட முயற்சி செய்த அரசின் முயற்சிக்கு எதிராக பாஜக பிரமாண்ட போராட்டம் நடத்தியது. அதைவிட பிரமாண்டமாக கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.