தேர்விற்காக திருமண கோலத்தில் மணமகள் செய்த செயல்! உடன் வந்த ஆசை மணமகன்!

Photo of author

By Hasini

தேர்விற்காக திருமண கோலத்தில் மணமகள் செய்த செயல்! உடன் வந்த ஆசை மணமகன்!

நம்மில் பலரும் தேர்வை எப்படி ஒத்திப் போடலாம் அல்லது தேர்வில் இருந்து  எப்படி தப்பிக்கலாம் என்று தான் யோசிப்பார்கள். ஆனால் குஜராத்தில் ஒரு பெண் திருமண நாளன்று மணக்கோலத்தில் தேர்வு எழுதியுள்ளார். இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தாரியா. இவர் ராஜ்கோட்டில் உள்ள சாந்திநிகேதன் கல்லூரியில் இளநிலை சமூகப் பணி படிப்பு படித்து வருகிறார். இதனிடையே அந்த பெண்ணுக்கும் பார்த் படேலியா என்பவருக்கும் திருமணம் செய்ய இருவரது பெற்றோரும் திருமணம் நிச்சயம் செய்தனர்.

மேலும் இவர்களுக்கு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் நடத்த இரு தரப்பு பெற்றோரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்தனர். இந்நிலையில் அதே நாளில் சிவாங்கி படித்து வந்த இளநிலை சமூகப்பணி பட்டப்படிப்பின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. எனவே இது குறித்து மிகவும் குழப்பம் அடைந்த சிவாங்கி அந்நாளில் தேர்வு எழுதுவதை குறித்து நிலையான ஒரு முடிவை எடுத்திருந்தார்.

மேலும் அவர் என்ன ஆனாலும் தேர்வு எழுதுவது என்பதை குறிக்கோளாக வைத்தார். இது குறித்து வீட்டில் இருக்கும் இரு தரப்பு பெற்றோருக்கும் சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மேலும் வருங்கால கணவரிடம் இதைப்பற்றி உறுதியோடு பேசியிருந்தார். எனவே செமஸ்டர் தேர்வான இன்று மணக்கோலத்தில் தேர்வு அறைக்கு வந்து தேர்வு எழுதினார்.

அதன்பிறகு சில மணி நேரங்கள் கழித்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என இரு தரப்பினரும் பேசி வைத்திருந்தனர். எனவே இன்று திருமணமும் அவருடைய தேர்வும் வந்ததன் காரணமாக, சிவாங்கி திருமண கோலத்திலேயே, வருங்கால கணவருடன் தேர்வு அறைக்கு வந்தார். அங்கு வந்த அவர் தேர்வை எழுதினார். அவர் தேர்வு எழுதி முடிக்கும்வரை வருங்கால கணவரும் அங்கேயே காத்திருந்தார். அதன்பிறகு அந்த பெண்ணுக்கும், பார்த் படாலியாவுக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.