ஒரு காதல் ஜோடி செய்த செயல்! காதலை சோதிக்க சரியான வழி!
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வகையில் தனது காதலை பரிசோதனை செய்கின்றனர். சிலரின் காதல் வெற்றி அடைகிறது, சிலரது காதல் எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிகிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சமூகமும் ஒரு விதத்தில் பொறுப்பாகிறது.
வெளி நாட்டில் ஒரு ஜோடி புதுவிதமாக தங்களது காதலை பரிசோதனை செய்துள்ளனர். அவர்கள் அந்த வழி சரி என்று தோன்றி செய்தனர். ஆனால் காதல் தோல்வியில் முடிந்தது.
கார்கிவ் நகரைச் சேர்ந்த விக்டோரியா புஸ்டோவிடோவாவும் (29), அலெக்ஸாண்டர் குட்லேவும் (33) காதலித்து வந்தனர். தங்கள் காதலை சோதனை செய்ய விரும்பிய இருவரும், காதலர் தினத்தன்று தங்கள் கைகளை இரும்புச் சங்கிலியால் விலங்கிட்டுக் கொண்டனர். சுமார் 123 நாட்கள் அதோனோடு இருந்த இருவரும் தங்களுக்கான தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டதாக உணர்ந்ததை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் சங்கிலியை வெட்டிக் கொண்டு உள்ளனர். இணைப்பு துண்டிக்கப்பட்டதும் விக்டோரியாவும், அலெக்ஸாண்டரும் தனித்தனியாகப் பிரிந்து சென்று விட்டனர்.
காதலர் தினத்தன்று தங்களின் ஒரு கைகளை இரும்பு சங்கிலியால் கட்டிக் கொண்ட இவர்கள் சுமார் 123 நாட்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, ஒரே இடத்தில் இருப்பது, 24 மணி நேரமும் ஒருவரையொருவர் இமை பொழுதும் கூட பிரியாத நிலையில் வாழ்ந்து வந்தனர். எனினும் இந்த காதல் வாழ்க்கையில் சுதந்திரம் எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்த காதலர்கள் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து செல்வதாக அறிவித்து பிரிந்து சென்றுவிட்டனர்.
இவர்களது இன்ஸ்டாகிராமில், நாங்கள் செய்ததை மீண்டும் யாரும் செய்ய வேண்டாம் என்றும், மற்ற தம்பதிகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்றும் நாங்கள் நினைக்கிறோம் எனவும் தெரிவித்தனர். இவர்களின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில், இருவரும் தனித்து தனி தனியாக நின்று புகைபடத்திற்கு போஸ் கொடுத்தனர்.
இதுவும் ஒரு நல்ல யோசனை தான் காதலித்தோம் என்று அவசர அவசரமாக திருமணம் செய்து முடிவில் விவாகரத்து பெற்று மனம் வருத்த மடைவதற்கு பதில் இது சரியானது என்று நினைக்கலாம். ஒரு மதிப்பு மிக்க காதல் ஒருவரிடத்தில் 123 நாட்கள் தான் வாழ எடுத்துக் கொண்டுள்ளது.