துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி!

Photo of author

By Hasini

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி!

Hasini

The act of a teenager in the office of the Deputy Commissioner! Shock to the public!

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி!

தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருமுல்லைவாயல் மூர்த்தி நகரில், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. 25 வயதான இவர் 2019ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் எல்லப்பனுக்கு சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

மேலும் அந்தத் தொடர்பின் காரணமாக கடந்த ஒரு மாதமாகவே எல்லப்பன் கவிதாவை விட்டு பிரிந்ததோடு அந்த பெண் உடனேயே வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இதனை தட்டி கேட்டால் கவிதாவை எல்லப்பன் மிரட்டிவதுடன், உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து கவிதா தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மதியம் ஆவடியில் உள்ள அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார்.

அப்போது அவர் அலுவலக நுழைவு வாயிலில் நிறுத்தியிருந்த துணை கமிஷனரின் காரின் முன்பு திடீரென, தான் தயாராக கொண்டுவந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் அவரை பிடித்து தடுத்து நிறுத்திவிட்டனர். இதையடுத்து துணை கமிஷனர் ராகேஷ் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கவிதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.