செங்கோட்டையனுக்கு கூடுதல் பலத்தை சேர்த்த இபிஎஸ்யின் செயல்.. குஷியில் நால்வர் அணி!!

0
338
The action of EPS which added extra strength to Sengottaiyan.. Four team in Khushi!!
The action of EPS which added extra strength to Sengottaiyan.. Four team in Khushi!!

ADMK: எப்போதும் இல்லாத அளவிற்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் நிலையில், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தான். அதிலும், கட்சியின் முக்கிய முகமான செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், சில தினங்களுக்கு முன்பு அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் போன்ற அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த செய்தி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரோடு மக்கள் இபிஎஸ்யின் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவிலுள்ள மூத்த அமைச்சர்கள் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார். அது யாராக இருக்குமென்று அனைவரும் வினவி வந்த நிலையில், அவர்களை கண்டறிந்த இபிஎஸ், இன்று அவர்களை கட்சியிலிருந்து அடியோடு நீக்கியுள்ளார். இதில் முக்கியமாக செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான சத்தியபாமா உடன் சேர்த்து 12 பேர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் சமயத்தில் இது அதிமுகவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கையுடன் நால்வர் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி நால்வர் அணிக்கு மேலும் பலத்தை கூட்டி உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். இந்த அணியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக விரைவில் அறிவிக்கப்படும் என்று சசிகலா. ஓபிஎஸ், டிடிவி தினகரன், போன்றோர் கூறி வந்த நிலையில் அது எந்த மாதிரியான செயலாக இருக்குமென அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருகின்றனர். 

Previous articleஅடுத்தடுத்து சிக்க போகும் திமுக அமைச்சர்கள்.. புலம்பும் ஸ்டாலின்!!
Next articleகூட்டணியை செயலில் அறிவித்த பிரேமலதா.. இதுவும் போச்சா!! புலம்பும் திராவிட கட்சி!!