வெற்றி களிப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயல்! குளிர்பானம் அதுவும் ஷூவிலா?

Photo of author

By Hasini

வெற்றி களிப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயல்! குளிர்பானம்  அதுவும் ஷூவிலா?

நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி வெற்றி கோப்பையை தட்டி  சென்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார் வார்னர். இவர் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 50 ரன்களில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் வழிவகுத்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் மிகுந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் ஷூவில் குளிர் பானம் ஊற்றி குடித்துள்ளனர். அவர்களது இந்த செயல் இது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.