கனவில் வந்து பெண் பேய் மிரட்டியதால் முதல் நிலை காவலர் செய்த செயல்! பதைபதைத்த மனைவி!

Photo of author

By Hasini

கனவில் வந்து பெண் பேய் மிரட்டியதால் முதல் நிலை காவலர் செய்த செயல்! பதைபதைத்த மனைவி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு காவலர் கனவில் வந்து பேய் பயமுறுத்தியதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் கடலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் முதல் நிலை காவலராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி விஷ்ணு ப்ரியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் கடலூர் மாவட்டத்தில் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினர் குடும்ப விழாவிற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற அவர், அவர்களை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து மனைவி திரும்பவும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி அருகில் உள்ளோர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த காவலர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்துள்ளார். மேலும் 15 நாட்கள் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு வீட்டின் பூஜை அறையிலேயே தவம் இருந்துள்ளார். ஏனெனில் அவருக்கு கனவில் ஒரு பெண் பேய் வந்து மிரட்டுவதாகவும், அவர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு சிறிது பயம் நீங்கி அவர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

ஆனாலும் இரவு தூங்கும் நேரத்தில் அந்தப் பெண் பேய் வந்து அவரை மிரட்டுவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் பேய் அதே குடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய பெண்ணின் உருவம் என்றும் அவர் கூறியிருந்தார். இதன் காரணமாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் அவர் தனியாக இருந்த நேரத்தில் இவ்வாறு செய்துள்ளது. அவரது மனைவி இதனால் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சக போலீசாரிடம் இது மிகுந்த அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.