மகனை மீட்க தாய் செய்த செயல்! வெறும் கைகளால் அடித்த வீர மங்கை!

Photo of author

By Hasini

மகனை மீட்க தாய் செய்த செயல்! வெறும் கைகளால் அடித்த வீர மங்கை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப்பகுதி. இங்கு கலாபசாஸ் எனுமிடத்தில் தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த, ஒரு ஐந்து வயது சிறுவனை மலை சிங்கம் தாக்கியுள்ளது. அதனை தொடர்ந்து அந்த சிறுவனை பிடித்து தனக்கு இரையாக நினைத்து,  புல்வெளியில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.

சிறுவன் கதறிய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், என்ன செய்வதென்று  சிறிதும் யோசிக்காமல், அந்த சிங்கம் குழந்தையை விடும் வரை வெறும் கைகளாலேயே அடித்துள்ளார். இதனால் சிங்கம் குழந்தையை விட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. அதன் பின்னர் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள்  கண்டுபிடித்த  அந்த மலை சிங்கத்தை சுட்டுக் கொன்றனர்.

மேலும் தலை மற்றும் உடல் பகுதிகளில் காயமடைந்த அந்த சிறுவனுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உடல் நிலை தற்போது சீராகவே உள்ளது.