உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்!

0
168
The action taken by the photographer for not providing food! Tragedy in marriage!
The action taken by the photographer for not providing food! Tragedy in marriage!

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்!

நம்மில் பலருக்கு உணவு தான் மிக முக்கியமான ஒன்று. அது இல்லாவிட்டால் சிலருக்கு வேலையே ஓடாது. ஏன் ஒன்றுமே ஓடாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு உணவு சாப்பிடாவிட்டால் நாமெல்லாம் ஒரு மிருகங்கள் ஆகவே ஆகிவிடுவோம் என்ற நிலையில் தான் உள்ளோம்.

நிறைய மீம்களில் கூட எனக்கு சோறு தான் முக்கியம் என்ற ஸ்டேட்மென்ட் அடிக்கடி உறுதி செய்து கொண்டே இருந்தார்கள் சில மீம்ஸ் கிரியேட்டர்கள். பசி வந்துவிட்டால் சிலருக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியாது. அந்த அளவுக்கு நமக்கெல்லாம் உணவு ஒரு இன்றியமையாத ஒன்றாகும். நாம் சாப்பிடும் உணவிற்கு ஒரு தனி சிறப்பு உண்டு.

ஆனால் சாப்பிடாத நிலையில் நாம் எப்படி இருப்போம் நினைத்து பாருங்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இந்த திருமணத்திலும் நடந்துள்ளது. திருமணம் நண்பனுக்கு தானே என குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக் கொண்டதாக அந்த பெண் புகைப்பட கலைஞர் சமூகவலைத்தளங்களில் சொல்லி இருக்கிறார்.

அந்த போட்டோகிராபர் குறிப்பாக பெண் வேறு. அந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து அதாவது காலை 11 மணி முதல் இரவு ஏழு முப்பது மணி வரை உணவு என்று அங்கு கண்ணில் எதுவுமே காட்டப்படவில்லையாம். இதற்கும் அவர் மணமகனின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அந்த புகைப்படக் கலைஞர் ஆத்திரமடைந்து திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் மணமகன் முன்பே அழித்துவிட்டார்.

இது அங்கிருந்த அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் என்ன செய்வது பசி அவரை அந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டுள்ளது. புகைப்பட கலைஞராக இருந்தாலும், வேலைக்கு வந்த வேலைக்காரராக இருந்தாலும் அவரும் மனிதர் தானே. அவருக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும் அல்லவா? அதன் காரணமாகத்தான் இந்த நிகழ்வு நடந்தது போல.

தற்போது கூட இதை பலர் தன் ஸ்டேட்டஸ் மற்றும் மீம்கள் போட ஆரம்பித்து விட்டனர். அந்த அளவிற்கு விஷயம் வைரல் ஆகி உள்ளது பாருங்கள்.

Previous articleபாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!
Next articleபால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!