தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தயாரிப்பாளர் செய்த செயல்! அந்த பெண் செய்த புகார்!

Photo of author

By Hasini

தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தயாரிப்பாளர் செய்த செயல்! அந்த பெண் செய்த புகார்!

இப்போதெல்லாம் திரைத்துறையில் பலரும் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்ககளை இவ்வாறு தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது இதை ஒரு வாடிக்கையாகவே மாற்றி விட்டனர். வேலைக்கு வரும் பெண்களை எதற்கு இவ்வாறு செய்ய வேண்டும்.

மராட்டிய மாநிலத்தில் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான இவர் சில திரைப்படங்களையும், சில வெப் தொடர்களையும் தயாரித்துள்ளார். இதற்கிடையே ஒரு தொடரில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை என விளம்பரப்படுத்திய அவர், அதில் நடிக்க வந்த பெண்ணை நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து 21 வயது இளம் பெண்ணிடம் நடிப்பதற்கு வாய்ப்பளிக்கிறேன் என கூறி  அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அவர் மீது கடந்த மார்ச் மாதம் ஒரு இளம்பெண் புகார் அளித்திருந்தார்.

அந்த இளம்பெண் மும்பை நகரின் கோரிகான் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில் அவரின் முன் ஜாமீன் இந்த புகாரின் காரணமாக ஐகோர்ட்டு ரத்து செய்து இருக்கிறது. கோர்ட் முன்ஜாமீனை ரத்து செய்ததன் காரணமாக இந்த வழக்கில் தயாரிப்பாளரை போலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அவரை கைது செய்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.