நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்!

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்!

தற்போது சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நடந்த கொடுமைகளை விவரிக்கும் விதமாக அந்தப் படத்தை எடுத்துள்ளனர். அதில் நடிப்பவர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார்கள் என்று பலர் பாராட்டினாலும், அந்த படம் பலரது விமர்சனங்களுக்கும் ஆளானது.

இது நமக்கு 90 களில் வாழ்ந்த பலவற்றை நினைவூட்டும் விதமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. இந்த படத்தை சூர்யா தயாரித்து ஞானவேல் இயக்கியுள்ளார். இதில் அனைவரின் பெயரும் உண்மையாக வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்காக போராடிய கோவிந்தன் என்பவரின் பெயரே படத்தில் பயன்படுத்தவில்லை என்றும், காவல்துறையில் இருக்கும் ஒருவர் உண்மை சம்பவத்தில் ஒரு கிறித்துவர் ஆனால் படத்தில் அவர் இந்து சமயத்தில் ஒரு ஜாதியை குறிப்பிட்டு கூறும் விதமாக இருந்தது என்று பலரும் மாற்று கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.

அதை தொடர்ந்து அந்த படத்தை உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து எடுத்து இருக்கிறார்கள் என்று ஒரு குழுவினரும், பொய்யான கதையை திரித்துக் கூறி இருக்கிறார்கள் என்று மற்றொரு குழுவினரும் வாக்குவாதம் செய்யும் அளவிற்கு அந்த பிரச்சனை வளர்ந்து வந்த நிலையில், தேடுதலின் காரணமாக, தற்போது உண்மையான ராஜகண்ணுவின் மனைவி பார்வதிபாட்டியை பற்றிய பல்வேறு உண்மைகள் நமக்கு தெரிய வந்துள்ளது.

சினிமா காட்சியில், அந்த லாக்கப்பில் நடைபெறும் விஷயங்களை அதாவது நடிப்பாக பார்த்த நமக்கே அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் நிஜத்தில்  அதை பார்த்து, அவர்களால் எப்படி இருந்திருக்க முடியும்? நினைத்துப் பாருங்கள். இந்த படத்தை முதல்வர் உட்பட சில பிரபலங்களும் பாராட்டி வந்த நிலையில், தற்போது பார்வதிபாட்டிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு மனை பட்டா ஒன்றை கொடுப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியது.

செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி @jbismi அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.
28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் என்று கூறி உள்ளார்.

Leave a Comment