ஒருவரிடம் செல்வம் அதிகம் இருக்கின்ற பொழுது அல்லது கல்வி அதிகம் இருக்கின்ற பொழுது, புகழ் அதிகமாக இருக்கின்ற பொழுது ஒரு சில அவமதிப்புகளை நாம் செய்து விடுவோம். அதாவது ஒருவரிடம் செல்வம் அதிகமாக இருந்தால் பிறரை மதிக்காமல், கர்வம் கொண்டு இருப்பர்.
கல்வி அதிகமாக இருந்தாலும் மற்றவர்களுக்கான மரியாதையை கொடுக்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பது அவர்களுக்கு பாவங்களை சேர்த்து விடும்.
ஒருவர் நம்மிடம் பேசும் பொழுது இவர் நமது தகுதிக்கு ஏற்றவர் இல்லை என்று, அவரை அவமதித்து பேசாமல் திரும்பி செல்வதும் ஒருவிதமான பாவம்தான். இவ்வாறு மற்றவர்களை மதிக்காமல் செய்யக்கூடிய பாவங்களை, மலர்களை தானம் கொடுப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.
அதேபோன்று நமது தீவினை என்பதை நீக்கி அமைதியான மற்றும் சுகமான வாழ்க்கையை நமக்கு பெற்று தரும். ஒரு பூவினை நமது கையில் எடுத்து வைத்து பார்க்கும் பொழுது, அந்த பூவின் நிறம் மற்றும் வாசனையே நமக்கு ஒரு மன அமைதியை கொடுக்கும்.
எனவே அத்தகைய பூக்களை தானம் கொடுத்தாலும் நமக்கு மன அமைதி என்பது கிடைக்கும்.
நம்மால் முடிந்த அளவிற்கு பூக்களை வாங்கி ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் கொடுத்து, இதனை கோவிலுக்கு வருபவர்களிடம் கொடுக்க சொல்லி கொடுத்து விடலாம். அல்லது நாமாகவே கோவிலுக்கு வருபவர்களுக்கு நமது கையால் பூக்களை தானமாக கொடுக்கலாம்.
அதேபோன்று பெண்கள் ஏதேனும் ஒரு விசேஷங்களுக்கு செல்லும் பொழுது அதிக அளவில் பூக்களை வைத்திருந்தால், அதனை அருகில் இருப்பவர்களுக்கும் ஒரு சிறிய அளவிலாவது கொடுத்து பகிர்ந்து விட்டு வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பார்க்க வைத்து நாம் அதிக அளவில் பூக்களை வைக்க கூடாது.
எனவே விசேஷ நாட்களில் அனைவரும் கூடி இருக்கும் பொழுது, நமது பூக்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதன் மூலம், பூக்களை தானம் செய்ததற்கான பலனை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.