பிரச்சாரம் ஒதுக்கி வைக்கப்பட்டதன் பின்னணி.. அதிமுகவில் பெருகும் குழப்பங்கள்!

ADMK: அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலை விட அதிமுகவின் பிரச்சனைகளில் தான் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை தர்மபுரியில் நடைபெறவிருந்த பிரச்சாரத்தை வானிலையை காரணம் காட்டி ஒதுக்கி வைத்து விட்டு, டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்குவது குறித்தும் இபிஎஸ் பேசியதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அதிமுகவின் சுற்றுப்பயணம் நாமக்கல் மாவட்டத்தில் 20.9.2025, 21.9.2025 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் அது ஒதுக்கி வைக்கபட்டுள்ளது. வானிலை காரணமாக இது ஒதுக்கி வைக்கபடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதிமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் திமுகவில் இணைவதும், கட்சியிலிருந்து விலகுவதுமாக உள்ளனர்.

இதனால் கட்சி பலவீனமடைவதை உணர்ந்த இபிஎஸ் எஞ்சியுள்ளவர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மீண்டும் அமித்ஷாவை சந்திக்க உள்ளார் என்றும், சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை கேட்டதால் அதிமுக உள்ளகத்தில் சச்சரவு நிலவி வருகிறது. அதனை சமரசம் செய்வதற்காக டெல்லி செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு வேளை இது நிகழ்ந்தால் அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் மற்றும் கட்சியின் வலிமையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.