தூங்கிய பெண்ணை இழுத்து சென்று கொன்ற கரடி! தேடுதல் வேட்டை!

0
222
The bear that dragged the sleeping woman away and killed her! Search Hunt!
The bear that dragged the sleeping woman away and killed her! Search Hunt!

தூங்கிய பெண்ணை இழுத்து சென்று கொன்ற கரடி! தேடுதல் வேட்டை!

டெடி பியர் என்றால் பெண்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு பொம்மை ஆகும். எப்போதும் அதனுடனேயே இருப்பார்கள் சில பேர். தற்போது எல்லார் வீட்டிலும் அந்த பொம்மை இல்லாமல் இருப்பதில்லை. குட்டி குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை அனைவரையும் அப்படி மயக்கி வைத்துள்ளது.

ஆனால், நாம் டெடி பியர் என்று சொல்லப்படும் கரடி ஒரு பெண்ணை கடித்து குதறி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர், அவர் பெயர் லியா லோகன். 65 வயதான இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் இருந்து மொன்டானா மாகாணத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் 3 பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மொன்டானா மாகாணத்தின் ஓவாண்டே நகரை சென்றடைந்தனர். அதன் பின் அங்கேயே ஓய்வெடுக்க முடிவு செய்த அவர்கள், இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டு, அனைவரும் தனித்தனியாக குடில்களை அமைத்து அதனுள்ளே தூங்கினார்கள். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு ஒரு பெரிய கரடி வந்துள்ளது. அந்த கரடி குடிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த லியா லோகனை தர தரவென இழுத்துச் சென்று கடித்து குதற ஆரம்பித்தது.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது தோழி மற்றும் சகோதரி இருவரும்  கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வீசி எறிந்து கரடியை விரட்டினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வனத்துறை அதிகாரிகள் அந்த கரடியை தேடி கண்டுபிடித்து கொல்ல முடிவு செய்துள்ளனர் என கூறப்படுகிறது. இதற்காக அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleமோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?
Next articleதமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் சந்திப்பு!