நிதான ஆட்டத்தில் இந்திய அணி!

Photo of author

By Sakthi

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் மட்டை வீச தீர்மானித்தது.

ஜோ பர்ன்ஸ் மேத்யூ வேட் ஆகியோர் முதலில் களம் இறங்க நான்காவது ஓவர் பௌலிங் செய்யவந்த பும்ரா ரன் எதுவும் எடுக்க ஆரம்பிக்காத பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

பும்ப்ராவோடு ஒன்றிணைந்த அஸ்வின் மறுபுறம் விக்கெட்டை தூக்க ஆரம்பித்தார். அவர் வேட் விக்கெட்டை கைப்பற்றினார். அப்பொழுது அவர் 30 ரன்களை மட்டுமே சேகரித்து இருந்தார். இந்த போட்டியிலே அறிமுகம் ஆகும் சிவராஜ் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய விக்கெட்டை லபு சேனை விழுத்தி பெற்றுக்கொண்டார்.

அதன்பின்பு ஸ்டீவ் ஸ்மித், ரன் எதுவும் எடுக்காமலும் ஹெட் 38 ரன்களுடனும், வெளியேற அதன் பின்பு வந்த கேப்டன் டீம் ௧௩, கமின்ஸ் 9 ,என அடுத்தடுத்து அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஆல்ரவுண்டர் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஒரே தினத்தில் 72.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆஸ்திரேலியா மண்ணை கவ்வியது ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது.

அடுத்ததாக தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடுவதற்கு களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்னம்கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் முதல் ஓவரில் ஸ்ட்ரைக் எடுத்துக் கொண்டவர் மயங்க் அகர்வால், முதலில் பந்து வீச வந்தவர் மிட்செல் ஸ்டார்க், முதல் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் தன்னுடைய ஆட்டத்தை இருந்தார் அகர்வால் சென்ற போட்டிகளிலும் இவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

அடுத்ததாக களமிறங்கிய பலரின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் வீரர் புஜாரா தம்முடைய பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடி வருகிறார். அவருக்கு ஏற்ற சரியான ஜோடி என்பதுபோல சுப்னம்கில்லும் பொறுப்பாக தன்னுடைய ஆட்டத்தை ஆடி வருகிறார்.அவர் ஓபனிங் வீரராக இறங்க வேண்டும் என்பது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் அவர்களின் விருப்பம் ஆகவே அவரே வலியுறுத்தியிருந்தார்.

கில் 28 ரன்களுடனும் ,புஜாரா ஏழு ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து இந்திய அணி 36 ரன்களுடன் விளையாடி வருகின்றது.