விஜய்-க்கு செய்த மிகப்பெரிய “துரோகம்” இதை மறக்க வாய்ப்பே இல்லை! தவெக தொண்டர்கள் ஆரவாரம்!

Photo of author

By Jeevitha

விஜய் சினிமா துறையில் இருந்த போதே அரசியலில் ஒரு தாக்கம் இருந்தது. இந்த நிலையில் விஜய் இப்போது ஒரு தனி கட்சி தொடங்கிவிட்டார். இருந்த போதிலும் விஜய்-கும் அதிமுகவிற்கும் எப்பொழுதும் சேராது என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதையடுத்து விஜய்-ன் முதல் கட்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றமான “விஜய் மக்கள் இயக்கத்தினை” அரசியல் கட்சியாக மாற்றினார்.

ஆனால் இந்த கட்சி ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தனர். இதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய்-இன் ரசிகர்கள் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிமுகவுக்கு விஜய் ஆதரவாக ஒரு பிரச்சாரம் கூட செய்யவில்லை. இருந்தபோதிலும் அந்த ஆண்டு அதிமுக வெற்றி அடைந்தது. ஆனால் 2013-ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தின் மூலம் அதிமுகவுக்கும் விஜய்-கும் பிரச்சனை தொடங்கியது. அதற்கான காரணம் தலைவா படத்தின் டைட்டில் கார்டில் “டைம் டூ லீட்” என இருந்தது.

இது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இந்த நிலையில் அரசு தரப்பில் இருந்தே தலைவா படம் வெளியாக கூடாது என பல சிக்கல்கள் இருந்தது. இதனை தொடர்ந்து விஜய் தயாரிப்பாளர் தன்னை நம்பி பணம் போட்டு இருக்கிறார். அவர் ஏமாந்து விடக்கூடாது என எண்ணி ஜெயலலிதாவை நேரில் சந்திக்க இரண்டு முறை சென்றும் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, அதிமுக கட்சியினர் நான்கு பேர் சென்று படம் பார்த்த பிறகு தான் படம் வெளியிடப்பட்டது. இது மட்டும் அல்லாமல் “சர்கார்” படத்தில் மீண்டும் பிரச்சனை எழுந்தது. அந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க அதிமுக-வை விமர்சிக்கும் வகையில் இருந்தது என மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் விஜய் முழுவதுமாக அரசியலில் களம் இறங்கியதால் அவரது ரசிகர்கள் இணையத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் தலைவா மற்றும் சர்கார் படங்களின் போது அதிமுகவினர் நடந்து கொண்டதும் சர்க்கார் பட பேனர்களையும் கட்-அவுட்களையும் கிழித்ததை விஜய் ரசிகர்கள் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த விடியோ-வை விஜய் ரசிகர்கள் எடிட் செய்து அதில் மாநாடு வீடியோவையும் சேர்த்து “இருங்க பாய்” என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ-வில் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என கேப்ஷன் இட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள்.