எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிரடி திட்டம் போட்ட பாஜக!அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

0
108

2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று பாஜக அறிவித்திருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளமும் பாஜகவும் நெடுங்காலமாக கூட்டணி அமைத்து சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வந்திருக்கின்றன, சிரோன்மணி அகாலி தளம் கட்சியை அந்த மாநிலத்தில் வலுவான மிகப் பெரிய கட்சி என்ற காரணத்தால், அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 94 தொகுதிகளில் போட்டியிட்டு வருகின்றது அதோடு பாஜக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகின்றது.

சிரோன்மணி அகாலி தளம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றது, இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களை அந்த கட்சி எதிர்த்ததோடு, அந்தக் கட்சியை சார்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதால் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை துறந்து விட்டார். அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அந்த கட்சி வெளியேறிவிட்டது. அதேநேரம் பாஜகவோ அந்த கட்சி போனால் போகட்டும் என்று ஒதுக்கிவிட்டது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், பாஜகவின் பொதுச்செயலாளர் தருண்சுக் தெரிவித்ததாவது, 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி 117 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து களம் காணும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல மாநிலத்தில் இருக்கும் 117 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக அந்த கட்சி தன்னுடைய அமைப்பை ஒரு போர் காலத்தில் பலப்படுத்துவது போல பலப்படுத்துகின்றது. அந்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளைய தினம் இணையதளத்தில் 10 மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க இருக்கின்றார் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

Previous articleலஷ்மி விலாஸ் வங்கிக்கு நெருக்கடி – ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகள்!
Next articleஹாலிவுட் நடிகரயே மிஞ்சும் அளவிற்கு உடலை ஏற்றிய சரத்குமார்! வைரலாகும்  போட்டோ!