ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்!

Photo of author

By Hasini

ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்!

கோவில்பட்டி திலக் நகர் பகுதியில் ஒரு ரயில்வே தண்டவாளம் உள்ளது அங்கு இன்று ஒரு இளம் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும்  ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார் என்றும், மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்களையும் சேகரிக்க ஆரம்பித்தனர். நேற்று அதிகாலை ஆறு முப்பது மணி அளவில் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, அவர் யார்? எவ்வாறு இறந்தார்? தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது மாதிரியான கேள்விகளை முன் வைத்து அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அல்லது அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது போன்ற காரணங்களை முன்வைத்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்ற மாதிரியும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.