நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

Photo of author

By Pavithra

இந்திய-சீன எல்லைப் போரில் 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஆவார்.

இவரின் உடலை ராணுவ வீரர்கள் மூலம் நேற்று இரவு மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.அங்கு ஆட்சியர் வினய், எம்.பி. சு. வெங்கடேசன், எம்.எல்.ஏ. சரவணன் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் ராணுவ வீரர் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பழனியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஜூன் மூன்றாம் தேதி பிறந்தநாளையும் ஆறாம் தேதி திருமண நாளையும் கொண்டாடிய பழனி தற்போது வீரமரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் திகைக்க வைக்கிறது.