ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற சிறுவன்!!குவியும் பாராட்டுக்கள்!

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் ஏழைச் சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த ஏழைச் சிறுவன் டெல்லிக்கு அருகே உள்ள காசியாபாத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.இவரின் பெற்றோர் பிழைப்புக்காக பிஹாரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.பெற்றோருக்கு உதவும் வகையில் தனது பள்ளி படிப்பையும் பார்த்துக்கொண்டு மாலை நேரங்களில் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை இந்த சிறுவன் செய்து வருகின்றார்.

சிறு வயதிலேயே தன் பெற்றோருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இந்த சிறுவனுக்கு சிறு வயதிலிருந்தே சைக்கிள் பந்தய வீரராக வலம் வரவேண்டும் என்பது ரியாஸின் கனவு.கடந்த 2017 இல் நடந்த டெல்லி மாநில சைக்கிள் பந்தய போட்டியில் அவர் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.மேலும் அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் நான்காம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.சைக்கிள் ஓட்டி பயிற்சிப்பெற அவரிடம் சொந்த சைக்கிள் இல்லாமல் பிறரிடமிருந்து சைக்கிளை வாங்கி சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார்.

ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற சிறுவன்!!குவியும் பாராட்டுக்கள்!
இந்த மாணவரின் திறமையும் அவரின் ஏழ்மையும் பற்றி ஜனாதிபதியின் பார்வைக்கு சென்றன.இந்த நிலையில் ரியாஸ்சை ஊக்குவிக்கும் விதமாக ஜனாதிபதி புதிய பிரத்தியேக சைக்கிளை நேற்று பரிசாக வழங்கியுள்ளார்.மேலும் அந்தச் சிறுவன் உலகத்தர சைக்கிள் பந்தய வீரராக வலம் வருவதற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment