விமர்சனம் செய்த வீரருக்கு ஆறுதல் சொன்ன சிறுவன்! நாட்டையே கண் கலங்க வைத்த அவன் செயல்!

Photo of author

By Hasini

விமர்சனம் செய்த வீரருக்கு ஆறுதல் சொன்ன சிறுவன்! நாட்டையே கண் கலங்க வைத்த அவன் செயல்!

Hasini

The boy who said consolation to the player who criticized! His act that made the country dizzy!

விமர்சனம் செய்த வீரருக்கு ஆறுதல் சொன்ன சிறுவன்! நாட்டையே கண் கலங்க வைத்த அவன் செயல்!

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதன் காரணமாக நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தாலிக்கு எதிராக வாய்ப்பு வழங்கிய  மூவரும் கருப்பினத்தவர்கள் தான். எனவே அவர்களையும் கடுமையான விமர்சனங்களால் விமர்சித்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக இங்கிலாந்து ராணியிடமிருந்து எம்பிஇ பட்டம் பெற்ற மார்க்கஸ் தான் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளானார். இவர் பல மக்களுக்கு சேவைகளை செய்து இருக்கிறார். எனவே நாட்டில் உள்ள சிறுவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டெக்ஸ்டெர் ரொஷியர் என்ற 9 வயதுடைய சிறுவன் தான் ஹீரோவாக நினைக்கும் மார்க்கஸ்க்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

இது பலரையும் நெகிழச் செய்துள்ளது. இக்கடிதத்தை நேரலையில் படித்த பிரபல பத்திரிக்கையாளர் நேரலையிலேயே கண்கலங்கினார். அந்த கடிதத்தில் சிறுவன் இவ்வாறு எழுதியுள்ளான். டியர் மார்கஸ் ரஷ்போர்ட் கடந்த ஆண்டில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து என்னை கவர்ந்தவர். நேற்று அனைத்து விமர்சனங்களையும் அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் என்னை நீங்கள் பிரமிப்படைய செய்துள்ளீர்கள். உங்களை எண்ணி நான் மிகவும் பெருமை அடைகிறேன். மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள். நீங்கள் என்றும் எங்களின் நாயகன் தான் என்று சிறுவன் எழுதியுள்ளான்.

எனவே இங்கிலாந்து நாட்டின் முகம் இச்சிறுவனின் கடிதத்தில் வெளிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த கடிதத்தை வாசித்த ஊடகவியலாளர்களுக்கும் கண்கலங்கியது. இதுதான் உண்மையில் இங்கிலாந்தின் முகம் என சிறுவனின் கடிதத்தை சுட்டி காட்டியுள்ளனர்.

ஒன்பது வயது சிறுவன் எழுதிய கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் சுசண்ணா ரெய்டு கண்ணீர் அடக்க முடியாமல் நேரலையிலேயே தேம்பியுள்ளார். அவருடன் இப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரான ரன்வீர் சிங் என்பவரும் கண்கலங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.