காதலி வேறு திருமணம் செய்த நிலையில் தன் காதலுக்காக 35 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் காத்திருந்த காதலர்! இத்தனை வருடங்களா?

Photo of author

By Hasini

காதலி வேறு திருமணம் செய்த நிலையில் தன் காதலுக்காக 35 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் காத்திருந்த காதலர்! இத்தனை வருடங்களா?

தற்போதுள்ள காதலெல்லாம் மிகவும் குறைந்த நாட்களே நீடித்து உள்ளது. ஏனெனில் யாருக்கும் யார் மீதும் நம்பிக்கை இல்லை. மேலும் அப்படியே திருமணம் செய்து கொண்டாலும், எவ்வளவு நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று பார்த்தால், மிகவும் குறைந்த நாட்கள் தான் என்று  கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால் ஒரு காதலுக்காக ஒரு வருடம், இரண்டு வருடம், அல்ல 35 வருடங்கள் ஒருவர் காத்திருக்கிறார் என்றால்? அது மிகவும் அதிசயமான ஒரு செய்திதான்.

ஹாசன் மாவட்டத்தில் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா என்பவர். 65 வயதான இவர் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு மைசூருவில் கூலி வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் மைசூரைச் சேர்ந்த அவரது ஜெயம்மா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் எப்போதும் போல காதலாக மாறியது. இருவரும் மனதார காதலித்து வந்தனர்.

ஆனால் இவர்களது காதலுக்கு ஜெயம்மாவின்வின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக ஜெயம்மா பெற்றோர் சொன்ன மாப்பிள்ளையை மனம் விரும்பாமல் திருமணம் செய்து கொண்டார். இது காலம் காலமாக நடக்கும் போல. ஒருவரை காதலித்தாலும் மற்றொருவரை பெண்கள் பெற்றோர்களுக்காக திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஆனால் அந்த காதலனோ ஜெய்யம்மாவின் நினைவில் வேறொரு பெண்ணை திருமணமே செய்யாமல் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். மேலும் திருமணமான ஜெயம்மாவிற்கு குழந்தை இல்லாத காரணத்தினால் அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. நான்கு வருடங்களில் அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் அந்த காதலனும், ஜெயாம்மாவும் எதிர்பாராதவிதமாக சந்தித்தனர். அப்போது காதலன் திருமணம் செய்யாமல் தனக்காக இருப்பது ஜெயாம்மாவுக்கும், ஜெயம்மாகும் கணவனைப் பிரிந்து தனியாக இருப்பது காதலனுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து சந்தித்த அவர்கள்  கண்ணீர் சிந்தி பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இதையடுத்து கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்து திருமணமும் செய்துக்கொண்டனர். அதன்படி அவர்கள் 2  பேருக்கும் நேற்று முன்தினம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டையில் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களது நண்பர்கள் அவர்களை மனதார வாழ்த்தி திருமண வாழ்த்து தெரிவித்தனர். ஒரு காதலிக்காக 35 வருடங்கள் காத்திருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய ஒரு விஷயம்தான். ஏனெனில் இப்போது உள்ள யாருமே அப்படி உண்மையாக இருப்பதில்லை.