இலங்கைக்கு ராமர் கட்டிய பாலம் உண்மையானது! இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இராமர் கட்டிய ராமர் சேது பாலம் உண்மையானது என்று செயற்கைகோள் உதவியுடன் கண்டறிந்து இஸ்ரோ தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது.
பத்து தலை கொண்ட ராவணன் சீதையை கடத்தி கொண்டு இலங்கைக்கு சென்ற நிலையில் சீதையை மீட்டு வருவதற்கு இலங்கை செல்ல வேண்டும் என்ற நிலையில் இராமர் தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு மிதக்கும் கற்களை கொண்டு பாலம் கட்டியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்பொழுது வரை இராமர் இலங்கைக்கு கட்டிய பாலம் உண்மையானதா அல்லது பொய்யா என்பது வெறும் கற்பனையாகவே இருந்து வருகின்றது. பலரும் ஆராய்ச்சி செய்த நிலையில் ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவில் பாலம் இல்லை என்று தான் கூறுகின்றனர்.
நாமும் கூகுள் உதவியுடன் தேடி பார்த்தாலும் பாலம் இருந்ததற்கான தடயம் இருப்பது போன்று தெரிகின்றது. இருப்பினும் அது மணல் திட்டுக்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. இந்நிலையில் இஸ்ரோ தற்பொழுது இலங்கைக்கு இராமர் கட்டிய பாலம் உண்மையானது என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ ஆராய்ச்சி நடத்தி வந்தது. இதையடுத்து இராமர் கட்டிய இராமர் சேது பாலம் 99.98 சதவீதம் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கூறியுள்ளது. இராமர் சேது பாலம் 29 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும் இந்த பாலம் கடல் படுகையில் இருந்து 8 மீ உயரத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
அமெரிக்க செயற்கைக்கோள் ICESat-2 என்ற செயற்கைக் கோளின் உதவியுடன் இராமர் சேது பாலத்தின் வரைபடத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இராமர் கட்டிய இராமர் சேது பாலம் இந்தியாவின் கடைசி சாலை இருக்கும் தனுஷ்கோடி முதல் இலங்கை நாட்டின் தலைமன்னார் வரை உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.