சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றமா? மத்திய கல்வி வாரியம் முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

CBSE:சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டிற்கான பாடத்தில் புதிய மாற்றம் எதுவும்  கொண்டு வரப்படவில்லை என  சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 15% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் உள் மதிப்பீடு தேர்வு மற்றும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என தகவல் வெளியானது அதை மறுத்து இருக்கிறது  சிபிஎஸ்இ கல்வி வாரியம்.

சிபிஎஸ்இ  (Central Board of Secondary Education) என்பது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான கல்வி வாரியம் ஆகும். கடந்த 2019 ஆண்டின் கணக்கின் படி 21,448 பள்ளிகள் இந்த வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்  இந்தூரில்  சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில்   சிபிஎஸ்இ பிராந்திய அதிகாரி விகாஸ் குமார் அகர்வால் கலந்துக்கொண்டார்.

அதில் பேசிய அவர் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டம் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை குறைத்து புரிந்து படிப்பார்கள் என்று கூறினார். மேலும்
சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது சிபிஎஸ்இ  நிர்வாகம் . அதாவது பொதுத் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் , 2025 பொதுத் தேர்வில் பாடத்திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும்  அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என தெரிவித்து இருக்கிறது.

மேலும் பிப்ரவரி மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது அதற்கான தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.